மேலும் செய்திகள்
டிக்கெட் பரிசோதகரை தாக்கியவர் மீது வழக்கு
29-Jan-2026
நெட்டப்பாக்கம்: பாத்ரூமில் விழுந்த தனியார் பஸ் கண்டக்டர் இறந்தார். புதுச்சேரி, தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 24; தனியார் பஸ் கண்டக்டர்.இவருக்கு திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.வழக்கம் போல் பஸ்சிற்கு வேலைக்கு சென்றவர் நேற்று முன்தினம் கரியமாணிக்கம் தனியார் பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சில் துாங்கினார். பின், நேற்று காலை கார்த்தி வழக்கம் போல் அங்குள்ள பாத்ரூமிற்கு குளிக்க சென்றவர், வழுக்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது தாய் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில்,நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Jan-2026