உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குழந்தைகள் தின விழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

 குழந்தைகள் தின விழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: இந்திரா நகர், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் வட்டம் 2 அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் நடுநிலை பிரிவு வினாடி வினா போட்டியில் ஆரோக்கியதாஸ், மோனித் கணேஷ் முதல் பரிசு, உயர்நிலை பிரிவு பேச்சு போட்டியில் மோஹமதா பாத்திமா முதல் பரிசு, வினாடி வினா போட்டியில் ஜனனி, தர்ஷினி 2ம் பரிசு, நாடகத்தில் பாலமுருகன், அவினாஷ், தனுஷ், சித்தார்த், நிசார்திகா ஆகியோர் முதல் பரிசு, நடனத்தில் கிருபா டெய்சி, சுனிதா, அபிநயா, அனு ஷ்கா, பூஜா, தீபிகா ஆகியோர் 2ம் பரிசு பெற்றனர். மேல்நிலைப் பிரிவு நடனத்தில் தியா, சுபத்ரா மொகந்தி, பச்சையம்மாள், பிரியதர்ஷினி, ஐஸ்வர்யா மற்றும் ஷர்மிளா ஆகியோர் 2ம் பரிசு, பேச்சுப் போட்டியில் அனுஷ்கா 3ம் பரி சு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களை பாராட்டினார். பயிற்சி அளித்த விரிவுரையாளர்கள் ஜூடித் ஜெனட் ஜோஸ்லின், உமாமகேஸ்வரி மற்றும் கவிதா, ஆசிரியர்கள் அனிதா மேரி, கலைச்செல்வி, அமுதா, சிவலட்சுமி, செல்வம், சரவணன், ஈஸ்வர் ஆகியோர் பாராட்டப்பட்டனர். பள்ளியின் பொறுப்பாசிரியர் மணிமொழி, தலைமை ஆசிரியர் விஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ