உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.ஐ.டி., கல்லுாரியில் பாராட்டு விழா

எம்.ஐ.டி., கல்லுாரியில் பாராட்டு விழா

புதுச்சேரி; கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கல்வியில் சாதனை புரிந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை டா டா கன்சல்டன்சி சர்வீசஸ் மனிதவளத்துறை பொது மேலாளர் சிவசங்கரி யோகேஷ் தலைமை விருந்தினராக பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை, கல்வியில் சாதனை புரிந்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.கல்லுாரித் தலைவர் தனசேகரன் பேசுகையில், 'எந்த துறை அல்லது பதவி எதுவாக இருந்தாலும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு, நவீன பணியிடத்தின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள மாணவர்கள் விடாமுயற்சியுடன் பணியாற்ற வேண்டும்' என்றார்.இந்த கல்வியாண்டில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 1076 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புத் துறை டீன் ஜெயக்குமார், வேலை வாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை வாசித்தார். மேலாண்மை துறை பேராசிரியர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை