உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., வேட்பாளர் சிவசங்கர் பொன் நகரில் ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் சிவசங்கர் பொன் நகரில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி பொன் நகர், விக்டோரியா நகர், ஜவஹர் நகர் பகுதிகளில் செய்த மக்கள் நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டு காங்., வேட்பாளர் சிவசங்கர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் காங்., சார்பில் மனு தாக்கல் செய்துள்ள சிவசங்கர், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று மூன்றாவது நாளாக உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பொன் நகர், விக்டோரியா நகர், ஜவஹர் நகர் வீட்டு குடியிருப்பு மற்றும் பாவாணர் நகர் பகுதிகளில் காங்., வேட்பாளர் சிவசங்கர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, இப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக செய்துள்ள மக்கள் நலத்திட்ட பணிகளை தெரிவித்தும், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்கொள்ள வேண்டிய இப்பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு 'கை' சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை