உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காமராஜ் நகர் தொகுதிக்கு பாதாள சாக்கடை கேட்டு ஆர்ப்பாட்டம் காங்., பொறுப்பாளர் தேவதாஸ் அறிவிப்பு 

 காமராஜ் நகர் தொகுதிக்கு பாதாள சாக்கடை கேட்டு ஆர்ப்பாட்டம் காங்., பொறுப்பாளர் தேவதாஸ் அறிவிப்பு 

புதுச்சேரி: சாமிப்பிள்ளை தோட்டம், ஓம்சக்தி அவென்யூ பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 16ம் தேதி காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் அறிக்கை: காமராஜ் நகர் தொகுதி சாமிப்பிள்ளை தோட்டம், அணைக்கரை மேடு பகுதியில் உள்ள வெள்ளவேரி வாய்க்கால் மேற்பரப்பில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. மழைக்காலங்களில் வாய்க்கால் தண்ணீர் நிரம்பி வீடுகளுக்குள் புகுவதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால், பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சாமிப்பிள்ளை தோட்டம், ஓம் சக்தி அவென்யூ பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன், துவங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் முழுமை பெறவில்லை. இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.,விடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அணைக்கரை மேடு வெள்ளவேரி வாய்க்காலுக்கு உடனடியாக பக்கவாட்டு பாதுகாப்புச் சுவர் அமைக்கவும், சேதமடைந்துள்ள சிங்கம் பார்க்கை சரி செய்யவும், பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவும் வலியுறுத்தி காங்., சார்பில் வரும் 16ம் தேதி காலை 9:30 மணிக்கு சிங்கம் பார்க் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தேவதாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி