உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., தலைவர் வீடு திடீர் முற்றுகை நிர்வாகிகள் போராட்டத்தால் பரபரப்பு

காங்., தலைவர் வீடு திடீர் முற்றுகை நிர்வாகிகள் போராட்டத்தால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில், காங்., சார்பில், நடைபெறவுள்ள பாதயாத்திரைக்கு தலைமையை மாற்ற வலியுறுத்தி, மாநில தலைவர் வீட்டை நிர்வாகிகள் அதிரடியாக முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரியில் இழந்த செல்வாக்கை மீட்கவும், வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதியில் போட்டியிட்டு, ஆட்சியை கைப்பற்றிட காங்., கட்சி தலைமை வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார் படுத்தும் பொருட்டு, கட்சி சார்பில், மாநில முழுவதும் பாதயாத்திரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 1ம் தேதி கட்சி அலுவலகத்தில் நடந்த விடுதலை நாள் விழாவை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், பாதயாத்திரையை கட்சியின் பொதுச் செயலாளர் இளையராஜா தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கட்சி தலைமையில் இந்த முடிவு, நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த அதிருப்தி நேற்று பகிரங்கமாக வெடித்தது. ஆவேசமடைந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நேற்று காலை 10:00 மணி அளவில், புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வைத்திலிங்கம் விசாரித்தார். அப்போது, நிர்வாகிகள், விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது. அதற்குள் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பாதயாத்திரை அமைய வேண்டும். அதற்கு கட்சியின் தலைவரான நீங்கள் (வைத்திலிங்கம்) அல்லது முன்னாள் முதல்வரான நாராயணசாமி ஆகிய இருவரில் ஒருவர் தலைமை தாங்க வேண்டும். அல்லது இருவரும் தலைமை தாங்க வேண்டும். அப்போதுதான், பாதயாத்திரை எழுச்சியாக நடைபெறும். மக்களிடம் முழு ஆதரவு கிடைக்கும்' என்றனர். அதற்கு, வைத்திலிங்கம் இதுகுறித்து கட்சி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் அணுகுமாறு கூறினார். அதற்கு, நிர்வாகிகள் கட்சியின் தலைவர் நீங்கள் தான். நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வைத்திலிங்கம், மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு காரில் செல்ல முயன்றார். அவரை காரில் ஏற விடாமல் நிர்வாகிகள் மறித்தனர். ஆத்திரமடைந்த வைத்திலிங்கம் அங்கிருந்து, இண்டி கூட்டணி போராட்டத்திற்கு மிஷன் வீதியில் உள்ள ஜென்ம ராக்கினி மாதா கோவிலுக்கு நடந்தே சென்றார். கட்சியின் நலனுக்காக பேச வந்த தங்களை, கட்சி தலைவர் உதாசினப்படுத்தி சென்றதால் ஆவேசமடைந்த நிர்வாகிகள், கட்சி தலைமையை மாற்ற வேண்டும் என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. நிர்வாகிகள் கூறுகையி ல், 'கட்சியின் நலனுக்காகவே நாங்கள் கூறுகிறோம். இதுதொடர்பாக நாளை (இன்று) நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக் கை குறித்து முடிவு செய்ய உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை