உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதி காங்., நிர்வாகிகள், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காங்., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., மற்றும் சிவசேனா நிர்வாகிகளை கைது செய்யக்கோரி, அனைத்து தொகுதிகளிலும் போலீஸ் நிலையங்களில், புகார் அளிக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, நேற்று காலாப்பட்டு தொகுதி காங்., நிர்வாகிகள் சார்பில், முன்னாள் அமைச்சர் ஷாஜஹான் தலைமையில், சிவாஜி சாலை அருகில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஊர்வலமாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் சென்று, இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தனர். காலாப்பட்டு தொகுதி காங்., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ