உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்கம்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி : விடுதலை நகரில் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதி, விடுதலை நகர், உழந்தை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டம் குடிநீர் பிரிவு சார்பில், ரூ.14.50 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி,பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு,உதவி பொறியாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினசரி 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 400 கேன்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்திசெய்ய முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ