உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நாராயணசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை சார்பில், உழவர்கரை தொகுதிக்குட்பட்ட அரும்பார்த்தபுரம், திருக்குறளார் நகர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது. இப்பணியினை நாராயணசாமி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், என்.ஆர். காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி