உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி 

கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி 

வில்லியனுார் : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் கிழக்கு ராஜ கோபுரத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நடந்தது. வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கு ராஜகோபுர திருப்பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராஜகோபுரத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதில், முன்னாள் திருப்பணி குழு தலைவர் செல்வம் மற்றும் ஊர் பிரமுகர்கள் மோகன், என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சரவணன், தலைமை அர்ச்சகர் சரவணன், சிவாச்சார்யார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை