மேலும் செய்திகள்
11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு
09-Sep-2025
புதுச்சேரி: மழை எச்சரிக்கை காரணமாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த திடீர் மழையை எதிர்க்கொள்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் சட்டசபையில், அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், பொதுப் பணித்துறை எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை வெளியேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன், தலைமை பொறியாளர் வீரச்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Sep-2025