கருத்து கேட்பு கூட்டம்
புதுச்சேரி, : புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நில அளவை பதிவேடு இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.இதில் புதுச்சேரி உரிமம் பெற்ற நில அளவையர் மற்றும் உரிமம் பெற்ற நில வரைவாளர்களுக்கு எவ்வாறு மனுக்களை பெறுதல், அனுப்பதல், கட்டணம் நிர்ணயம், செயல்படுத்துவதற்கான காலக்கெடு, கணக்கெடுப்பு பணியின் குறுக்கு சோதனை, தணிக்கை போன்ற காரணிகளை கண்டறிய ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.சப்- கலெக்டர்கள், நகர அமைப்புத்துறை, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.