உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பந்த் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

பந்த் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை புதுச்சேரியில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் அந்தோணி, சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் சீனுவாசன், மாநிலத் தலைவர் பிரபுராஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்று, புதுச்சேரியில் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்தை வரும் 9ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இதையொட்டி, வரும் 23, 24, 25ம் தேதிகளில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதரவு கடிதம் கொடுப்பது, மேலும், பந்த் போராட்டத்தை முன்னிட்டு வரும் 9ம் தேதி புதுச்சேரியில் புதிய பஸ் ஸ்டாண்டு, சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனுார், வில்லியனுார், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய 8 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி