உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்டுக்குப்பம் மின் நிலையத்தில் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்

காட்டுக்குப்பம் மின் நிலையத்தில் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்

பாகூர் : காட்டுக்குப்பம் துணை மின் நிலையத்தில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் துணை மின் நிலையத்தில் நடந்த மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டத்திற்கு, செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மின் நுகர்வோர் பலர் கலந்து கொண்டு, மின் அழுத்த குறைபாடு, மின் கட்டண முரண்பாடுகள், அறிவிக்கப்படாத மின் தடை, பழுதான தெரு மின் விளக்குகள், செயல்படாமல் உள்ள மின் துறை அவசர கால உதவி எண்கள் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தனர். முன்னதாக, சேவைக்கான இருவார விழாவையொட்டி, மின் துறை வளாகத்தில், மரக்கன்றுகளை, செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவிபொறியாளர் அன்பழகன் ஆகியோர் நட்டனர். இளநிலை பொறியாளர் பாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !