புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச பரிசு பொருட்கள் வினியோகம் தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக செய்திக்குறிப்பு: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முறையற்ற பணப் பறிமாற்றம், தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தனி நபரோ அல்லது கட்சியோ, வாக்காளர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாகவோ ரொக்கம், பரிசு பொருட்கள் அல்லது இதர சலுகைகளை புதுச்சேரியில் வினியோகிப்பது குறித்து புகார்களை 18004250026 எண்ணிலும், pdy.gmail.com, மின்னஞ்சல் அல்லது 7598981438 வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.