தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பெரம்பலூர் : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 19வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்வி குழுமங்களின் செயலர் நீலராஜ் முன்னிலை வகித்தார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிங் தலைவர் சீதாராம், முதன்மை விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஐ.சி.டி., அகாடெமி தமிழ்நாடு மாநிலத் தலைவர் பூர்ணபிரகாஷ், துணைத் தலைவர் ராகவா சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், 8 யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் உட்பட 1,104 இளங்கலை மற்றும் 78 முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியின் முதல்வர் சண்முகசுந்தரம் வரவேற்று, கல்லுாரியின் அறிக்கையை வசித்தார்.பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியின் டீன் சேகர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், டீன்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அன்பு, ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகா, பேராசிரியர் கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.