உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 38 லட்சம் மோசடி தம்பதி கைது

ரூ. 38 லட்சம் மோசடி தம்பதி கைது

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 38 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை, நைனார்மண்டபம், சுதானா நகரை சேர்ந்தவர் மினிபிரியா. இவர், அதே தெருவில் வசித்த ரேவதி என்பவரிடம் தீபாவளி சீட்டு பண்டு கட்டி வந்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதால், ரேவதி தனது மகள் திருமணத்திற்கான கடனாக பணம் வாங்கி தருமாறு மினிபிரியாவிடம் கேட்டுள்ளார்.இதையடுத்து, மினிபிரியா தனது தெரிந்தவர்களிடம் இருந்து ரூ. 35 லட்சம் கடன் வாங்கி ரேவதி மற்றும் அவரது கணவர் மாயவனிடம் கொடுத்தார். மேலும், மினிபிரியா சீட்டுப்பணம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தையும் வழங்கினார். இந்நிலையில், ரேவதி தனது குடும்பத்துடன் திடீரென மாயமானர். இது குறித்து மினிபிரியா முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து கன்னியகோவில், சீனிவாசா நகரில் வசித்து வந்த ரேவதி மற்றும் அவரது கணவர் மாயவன் ஆகியோர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேவதி மற்றும் அவரது கணவர் மாயவன், இதேபோல் பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ