உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

புதுச்சேரி: கூரியர் ஊழியர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். முதலியார்பேட்டை, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 36; தனியார் கூரியர் ஊழியர். இவருக்கு திருமணமாகி, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் ரவிக்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !