உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் போட்டி : புதுச்சேரி அணி வெற்றி 

கிரிக்கெட் போட்டி : புதுச்சேரி அணி வெற்றி 

புதுச்சேரி: மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் மகளிருக்கான 50 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஹரியானாவில் நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், மேகாலயா அணியும் மோதின.முதலில் ஆடிய புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 243 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின்யுவஸ்ரீ 75 ரன், ஈஷா மாவி74 ரன், யாஷி பாண்டே 53 ரன் அடித்தனர்.மேகாலயா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. புதுச்சேரி அணியின் பட்டுள் 3 விக்கெட், அனைக்கா, அபிராமி தலா 2 விக்கெட் எடுத்தனர்.புதுச்சேரி அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுச்சேரி அணியின் யுவஸ்ரீ ஆட்டநாயகி விருது பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை