உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழக்கறிஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி துவக்கம்

வழக்கறிஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு இடையேயான, கிரிக்கெட் போட்டி, துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வரும், நவம்பர் 26ம் தேதி நடக்க உள்ள, சட்ட நாள் விழாவினை முன்னிட்டு, தாகூர் கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், வழக்கறிஞர்களுக்கு இடையேயான, கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அசோக்பாபு எம்.எல்.ஏ., தொழிலதிபர் புவனா, வழக்கறிஞர்கள் ராம் முனுசாமி, சென்னை ஐகோர்ட் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்தனர்.வீரர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். இதில் ஆறு அணிகள் பங்கேற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை