கிரிக்கெட் போட்டி: ஏனாம் அணி வெற்றி
வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், நேற்று ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுச்சேரி பிரிமியர் லீக் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி வரை பகல் இரவு ஆட்டங்களாக நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம் நடந்த 20வது லீக் போட்டியில், வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும், ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணியும் மோதின.முதலில் விளையாடிய ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. வேதாந்த் பரத்வாஜ் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.அடுத்து விளையாடிய வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, இந்த அணியின் அமன்கான் 12 பந்துகளில் 23 ரன், பானு ஆனந்த் 30 பந்துகளில் 37 ரன், பிரித்வி ராஜ் 39 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்தனர்.ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணி வீரர் வேதாந்த் பரத்வாஜ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மாலை 6:00 மணியளவில் நடந்த போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி, ரூபி ஒயிட் டவுன் லெஜன்ட் அணியும் மோதின.