உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

2 பேர் கைது: லாஸ்பேட்டை போலீசார் லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். 6வது குறுகுக்குத் தெருவில், உள்ள கடையில், சோதனை நடத்தினர். அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. அதையடுத்து கடை உரிமையாளர் லாஸ்பேட்டை ரவி,62; என்பவரை கைது செய்து, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், குறிஞ்சி நகர் முதல் குறுக்குத்தெருவில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ஞானசபை,60 என்பவரை கைது செய்து ரூ.800 மதிப்புள்ள புகையிலை பொருட்களை லாஸ்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். மிரட்டியவர் கைது: லாஸ்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இ.சி.ஆரில் ரோந்து சென்றனர். லதா ஸ்டீல் ஹவுஸ் பகுதியில், லாஸ்பேட்டை ஐயனார் மகன் பவித்திரன்,18, என்பவர், பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது: முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். முதலியார்பேட்டை பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி முத்து மகன் சக்திபாலன்,21, என்பவரை கைது செய்னைர். அதேபோல், வாணரப்பேட்டை சிறிய பாலம் அருகில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாணரப்பேட்டை சார்லஸ் மகன் ஹரிஹரன் என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை