மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
27-Oct-2024
புதுச்சேரி : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் குறித்து கோபாலசாமி எழுதிய, செங்கழுநீர் அம்மன் குறுங்காப்பிய நுால் வெளியீட்டு விழா, லாஸ்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது.தமிழ்வளம் இதழ் ஆசிரியர் இலக்கியன் தலைமை தாங்கினார். கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள் நுால் வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார். கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் ராமதாசு முதல் நுாலை பெற்றுக் கொண்டார்.காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் சிவ மாதவன் சிறப்புரையாற்றினார். மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் சம்பத் திறனாய்வு உரையாற்றினார். நுால் ஆசிரியர் கோபாலசாமி ஏற்புரையாற்றினார்.
27-Oct-2024