வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரவேற்கத்தக்கது
புதுச்சேரி : தினமலர் நடத்திய கோலப்போட்டியில் பங்கேற்ற சைபர் கிரைம் போலீசார், அசத்தலான விழிப்புணர்வு கோலம் வரைந்ததுடன், பொதுமக்களுக்கு நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தினமலர் மெகா கோலப்போட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று காலை நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று கோலமிட்டனர். இந்த கோலப்போட்டியில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சார்பில் பெண் காவலர்கள் சூர்யா, அபிநயா, கமலி, பூவிதா ஆகியோர் கலந்து கொண்டு சைபர் கிரைம்கள் குறித்து ரங்கோலி பிரிவில் அசத்தலான கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோலப்போட்டியை காண வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, சைபர் கிரைம் பெண் காவலர்களுடன், கார்த்திக், ராஜா, வினோத் இணைந்து சைபர் கிரைம்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
வரவேற்கத்தக்கது