மேலும் செய்திகள்
இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா
24-Aug-2024
நெட்டப்பாக்கம் : இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், கரியமாணிக்கம், கரையாம்புத்துார், மடுகரை கிளைகள் ஒன்றிணைந்து, கறவை மாடு கடன் வழங்கும் முகாம் நடந்தது.கரியமாணிக்கம் இந்தியன் வங்கி கிளையில் நடந்த, முகாமில் 115க்கும் மேற்பட்ட புதிய பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்குவதற்கு, 1 கோடியே 15 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டலத்தின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார், கரியமாணிக்கம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு காசோலை வழங்கினர்.கரியமாணிக்கம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராஜ் பாபு, கரையாம்புத்துார், மடுகரை கிளை மேலாளர்கள், கால்நடை விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
24-Aug-2024