நவராத்திரி பெருவிழாவில் தக் ஷணி மூலமந்திர ேஹாமம்
புதுச்சேரி : புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் நேற்று தக் ஷிணி மூலமந்திர ேஹாமம் நடக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உலக நன்மை வேண்டி, புதுச்சேரி காந்தி வீதி, வரதராஜப் பெருமாள் கோவில் அருகில் 5ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா மற்றும் துர்கா பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று 22ம் தேதி மாலை தக் ஷிண காளி மூல மந்திர ேஹாமம் நடந்தது. தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம், லஷ்மி விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் அறுமுகணம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றைய நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூன்றாம் நாளான இன்று மாலை தாரா தேவி மூல மந்திர ேஹாமம் மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது.