உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஒருங்கிணைந்த அரசு பணி தேர்வு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

 ஒருங்கிணைந்த அரசு பணி தேர்வு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

புதுச்சேரி: ஒருங்கிணைந்த அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தேர்வு நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த 18ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளான கடந்த 14ம் தேதி சர்வர் வேலை செய்யவில்லை. அதனால், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்க அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்ற அரசு, எல்.டி.சி., பணிக்கு நேற்று 18ம் தேதி மாலை 6:00 மணி வரையிலும், யூ.டி.சி., பணிக்கு இன்று 19ம் தேதி காலை 6:00 மணி முதல் நாளை 20ம் தேதி மாலை 6:00 மணி வரையிலும், இளநிலை நுாலக உதவியாளர் மற்றும் இதர 9 பணியிடங்களுக்கு 21ம் தேதி காலை 6:00 மணி முதல் 22ம் தேதி மாலை 6:00 மணி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை