உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலை மிரட்டல் : ஒருவர் கைது

கொலை மிரட்டல் : ஒருவர் கைது

புதுச்சேரி: போலீசில் புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். உழவர்கரையை சேர்ந்தவர் மகிழ்கோரகு 47, இவரை ரிஷிகுமார் 21, என்பவர் கடந்த மாதம் தாக்கினார். இது குறித்து மகிழ்கோரகு, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து ரிஷிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரிஷிகுமார் நேற்று முன்தினம் காலை மகிஷ்கோரகு வீட்டிற்கு சென்று, அவரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மகிஷ்கோரகு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து ரிஷிகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை