உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்காளனுக்கு கொலை மிரட்டல்; எம்.எல்.ஏ.,க்கள் கலெக்டரிடம் புகார்

அங்காளனுக்கு கொலை மிரட்டல்; எம்.எல்.ஏ.,க்கள் கலெக்டரிடம் புகார்

புதுச்சேரி: அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.,க்கள் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த விழாவில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அங்காளன் எம்.எல்.ஏ., ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில், அங்காளன் எம்.எல்.ஏ., வின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தரக்குறைவாக கமாண்ட் பதிவிடுவதாக, மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் டி.ஐ.ஜி.,யை சந்தித்து எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், கல்யாணசுந்தரம், சிவசங்கரன் புகார் அளித்தனர். இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் நேற்று மாலை கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கூறுகையில், அங்காளன் எம்.எல்.ஏ., குறித்து சமூக வலைத்தளத்தில் தரைகுறைவாக பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இன்று மீண்டும் தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்தது. இது சம்பந்தமாக கலெக்டர் மற்றும் டி.ஐ.ஜி.,யிடம் புகார் அளித்துள்ளோம். அரசியல்வாதிகள் துாண்டுதல் பெயரில் எம்.எல்.ஏ.,வை மிரட்டி உள்ளனர். மிரட்டல் விடுத்தவர் பெயரை கூட வெளியில் கூற தகுதி அற்றவர் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ