உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

புதுச்சேரி: சண்டே மார்க்கெட்டில் கடை நடந்த கூடாது என பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி, ரோகினி, 40; இவர் காந்திவீதி - கந்தப்பர் முதலியார் வீதி சந்திப்பில், சண்டே மார்க்கெட்டில், ஷூ கடை நடத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு வாரமும், புதுச்சேரியை சேர்ந்த வரதராஜன் என்பவருக்கு 500 ரூபாய் பணம் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், இனி சண்டே மார்கெட்டில் கடை போட கூடாது என அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர், ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை