உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு

26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் துறையில் 26 எஸ்.ஐ., பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ், அனைத்து எஸ்.பி.,களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு மற்றும் அணி வகுப்பு தேர்வு முறை வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான தகுதி பெற்ற 32 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் 183 தலைமைக் காவலர்களின் பெயர் பட்டியல், பாடங்கள், பாட திட்டங்கள் மற்றும் தேர்வு முறை குறித்த விபரங்கள் போலீஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றவர்கள் தேர்விற்கு தயாராக இருக்க வேண்டும். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் புதிய ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். தகுதி பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், போலீஸ் தலைமையக எஸ்.பி.,யிடம் முறையிடலாம். எழுத்து தேர்வு ஆங்கிலம்-50; பொது அறிவு-50; சட்டம் -100 என மொத்தம் 200 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் கேட்கப்படும். கேள்வித் தாள் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். சட்ட பாடதிட்டத்தில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் உள்ளூர் போலீஸ் நடைமுறையிலான கேள்விகள் இடம் பெறும். அணி வகுப்பு தேர்வு, டார்ன் அவுட், ஆர்ம்ஸ் டிரில், புட் டிரில் ஆகியவற்றிற்கு 30 மதிப்பெண், பணி பதிவேட்டிற்க 20 மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ