உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்

பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்க முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஓய்வூதிய நிர்வாக அமைப்பான, 'ஸ்பார்ஷ்' மூலம், பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் 'வாழ்நாள் சான்று' சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் சார்பில், ஜிப்மர், ஆடிட்டோரிய வளாகத்தில், ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் வரும், 21ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இதில் கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா முன்னிலை வகிக்கின்றனர்.இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர் மற்றும் சார்ந்தோர் தங்களது படை பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை