மேலும் செய்திகள்
ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
09-Jun-2026
புதுச்சேரி: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன் கண்டன உரையாற்றினார். இதில், மாநில பொதுச் செயலாளர் இளவரசி, துணைத் தலைவர் சத்தியா, துணை செயலாளர் உமா விநாயகம், மாநில பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
09-Jun-2026