உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காய்கறி கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரித்தல் செயல்விளக்கம்

 காய்கறி கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரித்தல் செயல்விளக்கம்

திருபுவனை: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் சார்பில், வீட்டு காய்கறி கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரித்தல் பற்றிய செயல்விளக்கம் மதகடிப்பட்டில் நடந்தது. வேளாண் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி, தற்சார்பு வேளாண்மை மற்றும் வீட்டுத் தோட்டத்தில் வீட்டு காய்கறி கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து, உரம் தயாரித்தலின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, உரம் தயாரிக்க தேவையான உபகரணங்களை வழங்கினார். ஏற்பாட்டினை ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஷ்வரி, செயல்விளக்க உதவியாளர் ஜெயசங்கர், அலுவலக ஊழியர்கள் சண்முகம், சுபாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ