உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

காரைக்கால்: காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம்,ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க உரிய அரசாணை வெளியிட வலியுறுத்தி நேற்று உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டுப் போராட்டக் குழு கன்வீனர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தார். .இதில் அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள்,உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !