அரசு உயர்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
புதுச்சேரி: பெத்துச்செட்டிப்பேட்டை பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கன்னி வீரக்குமார் தலைமை தாங்கினார். சுகாதரா உதவியாளாகள் ஜகன்நாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, டெங்கு நோய் குறித்தும், அந்த நோய் வராமல் எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், பொறுப்பாசிரியர் வனிதா, ஹெல்த் அம்பாசிட்டர் ஆசிரியர் அருணா, உடற் கல்வி ஆசிரியர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நிலை தலைமையாசிரியர் ராதிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.