டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தருமாபுரி எஸ்.ஆர்.எம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி முதல்வர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவ அதிகாரி தமிழரசி ஊர்வலத்தை துவக்கி வைத்து, டெங்கு நோய் பரவும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். சுகாதார ஆய்வாளர் முனுசாமி, கொசு வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் முக்கிய வீதிகளில் சென்று, டெங்கு விழிப்புணர்வு குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் நிஷா, முரளி, ஜெயஸ்ரீ, சந்திரலட்சுமி, ஆஷா பணியாளர் பாக்கியம் செய்திருந்தனர்.