உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி; முதலியார் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மலேரியா திட்ட இணை இயக்குநர் சிவராமன், கல்வித்துறை மாவட்ட திட்ட இயக்குநர் எழில் கல்பனா முன்னிலை வகித்தனர். டாக்டர் பாலாஜி, பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி வரவேற்றனர். மாணவர்களுக்கு டெங்கு மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, டெங்கு இல்லாத மாநிலமாக புதுச்சேரியை உருவாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, கோலம், ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின் என்.எஸ்.எஸ்., ஆசிரியை சாந்தா, சுகாதார உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை