உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

உழவர்கரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் டெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வழக்கறிஞர் சசிபாலன் துவக்கி வைத்தார்.புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் ஒழிக்கும் வகையில், உழவர்கரை தொகுதியில் டெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை வழக்கறிஞர் சசிபாலன் துவக்கி வைத்தார். மூலக்குளம் சந்திப்பு அருகில் துவங்கிய பேரணி, உழவர்கரை தொகுதி முழுதும் சென்றது. டெங்கு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொகுதி முழுதும் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வீடுகள், கடைகளுக்கு நேரடியாக சென்று டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில், உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை