உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் மருத்துவ கவுன்சில் ஆன்லைன் சேவை

பல் மருத்துவ கவுன்சில் ஆன்லைன் சேவை

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பல் மருத்துவ கவுன்சில் ஆன்லைன் சேவை துவக்கப்பட்டது.புதுச்சேரி, கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில், இயங்கி வரும் மாநில பல் மருத்துவ கவுன்சிலில் நேற்று முதல் ஆன்லைன் சேவை துவங்கப்பட்டது. இதனை பல் மருத்துவ கவுன்சில் பதிவாளர் அருண் பிரசாத் ராவ் துவக்கி வைத்தார்.அவர் கூறுகையில், 'இக்கவுன்சிலில் பதிவு செய்த புதுச்சேரி, மாகி, ஏனாம், காரைக்கால் மற்றும் வெளியூர், வெளிநாடு பல் மருத்துவர்கள் இனி புதுச்சேரி பல் மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு வராமல் ஆன்லைன் மூலம் தங்களது பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ