மேலும் செய்திகள்
புகார் பெட்டி
26-Jun-2025
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுாரில் துணை சபாநாயகர் ராஜவேலு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நெட்டப்பாக்கம் தொகுதி மகளிரணி தலைவர் கவுசல்யா பிரபாகரன் ஏற்பாட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கினார். விழாவில், பண்டசோழநல்லுார் கட்சி நிர்வாகிகள் தொகுதி துணைத் தலைவர் விஸ்வாதன், செயற்குழு உறுப்பினர் ஜெயபாலன், தேவராசு, கமிட்டி தலைவர் ஜெயராம், கமிட்டி துணை தலைவர் பழனி, சிவா, சிவக்குமார், விநாயகம், முரளி, உதயகுமார், மணிகண்டன், கவுதமன், மதன், ராகுல், அன்பு, கவியரசன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
26-Jun-2025