உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை தாசில்தார் தேர்வு முடிவு வெளியீடு

துணை தாசில்தார் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி: துணை தாசில்தார் பணிக்கான தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்விற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 31ம் தேதி நடந்தது. அதில் 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது பிரிவில் 200க்கு 155.75 மதிப்பெண் பெற்று இளஞ்செழியன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இப்பிரிவில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.சி., பிரிவில் மாணவி விஜயவள்ளி 146.50 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இப்பிரிவில் 5 பேர் தேர்வாகி உள்ளனர். ஓ.பி.சி., பிரிவில் மாணவர் குமார விஜயராஜ் ராம்ஜி 139.25 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இப்பிரிவில் 5பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இ.பி.சி., பிரிவில் பொற்செல்வன் (143.25), பி.சி.எம்., பிரிவில் ஆஷிப் மீரான் (132), இ.டபள்யூ.எஸ்., பிரிவில் ரிஷி (130.25) உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 12 பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !