உள்ளூர் செய்திகள்

விளக்கம்

புதுச்சேரி: ‘வீடு சூறையாடப்பட்ட வழக்கு, மூன்று பேர் கைது’ என்ற தலைப்பில் இன்று (நவ.,11) வெளியாகி உள்ள செய்தி தொடர்பாக, பூரணாங்குப்பத்தை சேர்ந்த ஜோதி செந்தில்கண்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட இடத்தில் எனது சகோதரி பார்வதி கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்; எனது இடமும் அங்குள்ளது. எங்களுடைய இடத்தில் அத்துமீறி நுழைந்து இடித்தவர்கள் மீது கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளேன். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தான் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்’ என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை