உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் பிரார்த்தனை

அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் பிரார்த்தனை

புதுச்சேரி: அரவிந்தர் பிறந்த தினத்தையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். மகான் அரவிந்தர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சமாதிக்க மலர் அஞ்சலி செலுத்தி, அவரது அறையை தரிசனம் செய்தனர். ஆசிரமத்தில் நடந்த கூட்டு தியானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ