உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அன்னை பிறந்த நாள் பக்தர்கள் தரிசனம்

 அன்னை பிறந்த நாள் பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி: அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களால் அன்னை என்று அன்போடு அழைக்கப்படும் (மிர்ரா அல்பாசா), பிரான்ஸ் நாட்டில் 1878ம் ஆண்டு பிறந்தார். புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்து அவரது ஆன்மிக பணிகளை மேற்கொண்டு, அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கினார். 1973ம் ஆண்டு புதுச்சேரியில் அன்னை காலமானார். அன்னையின் 148ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, நேற்று புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அன்னை மற்றும் அரவிந்தர் அறையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக காலை 5:00 மணியிலிருந்து 6:00 மணி வரை ஆசிரமவாசிகளின் கூட்டுப் பிரார்த்தனை ஆசிரமத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை