டைமண்ட் சிட்டி திறப்பு விழா
புதுச்சேரி: யோகம் புரமோட்டர்ஸ் மற்றும் பாண்டி லேண்ட் புரமோட்டர்ஸ் இணைந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீட்டு மனைகளை விற்பனை செய்து வருகிறது.நெய்வேலியில் கிரீன் டவுன்ஷிப், குள்ளஞ்சாவடியில் ரெயின்போ நகர், சேதராப்பட்டில் ஜெம் சிட்டி ஆகிய மனைப் பிரிவுகளை அமைத்து வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளனர். வில்லியனுார் - கொம்பாக்கம் மெயின் ரோடு அருகே டைமண்ட் சிட்டி மனை பிரிவு தொடங்கியுள்ளனர். டைமண்ட் சிட்டி திறப்பு விழா,கணபதி ஹோமத்துடன் நடந்தது.விழாவில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், என பலர் கலந்து கொண்டனர். டி.டி.சி.பி., மற்றும் ரெரா அப்ரூவல் பெற்ற டைமண்ட் சிட்டி மனைப்பிரிவு 15 அடி உயர காம்பவுண்ட் சுவருடன் உருவாக்கப்பட்டுள்ளது.மனை பிரிவில் 33 அடி அகல சாலை, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தக்கத் தொட்டி, ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, மனைப்பிரிவு முழுதும் சோலார் மின் விளக்குகள், சி.சி.டி.வி., கண்காணிப்பு என, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மனை பிரிவை வாங்குவதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று மனை வாங்கியவர்களுக்கு யோகம் புரமோட்டர்ஸ் உரிமையாளர் ரமேஷ், பாண்டி லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் அஸ்வின் குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.