மதுபான தொழிற்சாலை அனுமதி கோப்பினை திருப்பி அனுப்பினாரா கவர்னர்?
புதுச்சேரி: மதுபான தொழிற்சாலை அனுமதி விவகாரத்தில் கோப்பினை கவர்னர் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரியின் வருமானத்தை பெருக்க புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.இதற்கு காங்., கம்யூ., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.எந்த காலத்திலும் மதுபான தொழிற்சாலையை வர விடமாட்டோம். கவர்னர் அனுமதித்தால் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடருவோம். மதுபான தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் போராட்டம் நடத்துவோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மதுபான அனுமதி விவகாரத்தில் தி.மு.க., மட்டும் மவுனம் சாதித்து வருகிறது.இந்நிலையில் மதுபான தொழிற்சாலை அனுமதி கோப்பினை விளக்கம் கேட்டு கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தொழிற்சாலைக்கான நிலத்தடி நீர் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.