உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, உழவர்கரை தொகுதியின் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய தட்டாஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதில், மாநில இளைஞரணி தலைவர் வருண், பொதுச் செயலாளர்கள் ஆடலரசன், விக்கிரமாதித்தன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லக்ஷ்மி நாராயணன், மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன், மாநில ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ