மேலும் செய்திகள்
தொகுதி மேம்பாட்டு பணி ஆலோசனை கூட்டம்
1 minutes ago
இன்றைய மின்தடை
1 minutes ago
கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
3 minutes ago
இடிந்து விழும் மதில்… பெயர்ந்து சிதறும் கண்ணாடி…
3 minutes ago
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவிகளுக்கு தினமலர் பட்டம் இதழைமுன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து இலவசமாக வழங்கினார். புதுச்சேரி, தமிழகம் பள்ளி மாணவர்களுக்காக தினமலர் 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற தலைப்பில் வினாடி -வினா போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்தாண்டு மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 150 பள்ளிகளுக்கு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு மாணவிகளுக்கு தினமலர் பட்டம் இதழை சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கி பேசுகையில், நாட்டிற்கும், சமூகத்திற்கு பொறுப்பாக உள்ள நாளிதழ்களில் தினமலர் முதன்மையாக திகழ்கிறது. மாணவர்களின் எதிர்காலம் வளமையாக இருக்கும் வகையில், தினமலர் நாளிதழ் தனி இதழாக கொண்டுள்ளது. பட்டம் இதழ் அறிவு களஞ்சியாக உள்ளது. அதில் இல்லாத தகவல்களே இல்லை.கல்வி தான் அடித்தளம். கல்வி இருந்தால் வாழ்வில் உச்சத்தை தொட்டு சாதிக்கலாம். மாணவர்களுக்கு அறிவு, ஒழுக்கம், நேர்மை வளர்க்கும் பணியில் தினமலர் தன்னை அர்ப்பணித்துகொண்டுள்ளது. பட்டம் இதழை தொடர்ந்து படித்து மாணவிகள் தங்கள் வாழ்வினை உயர்த்தி கொள்ள வேண்டும்என குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி, தலைமையாசிரியர் செல்வநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 minutes ago
1 minutes ago
3 minutes ago
3 minutes ago