உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

வழிகாட்டியது தினமலர்

அடுத்த என்ன படிக்கலாம் என்பது குறித்த, கல்வியாளர்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்ன படித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இந்நிகழ்ச்சி இருந்தது. ஏ.ஐ., குறித்தும், அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர். மாணவர்கள் சிறந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய தினமலர் வழிகாட்டியது.மேனகா, செஞ்சி.

கல்வியாளர்கள் ஆலோசனை அருமை

கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் மாணவர் நான். தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த வழிகாட்டியில் கலந்து கொண்டேன். பிளஸ் 2 முடித்ததற்கு பின், மேற்படிப்பை எப்படி தேர்வு செய்வது என ஒன்றும் புரியாமல் இருந்தேன். இங்கு அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் சிறந்த முறையில் ஆலோசனை வழங்கினர். அடுத்து நான் ஆண்டுகளுக்கு எந்த துறை முன்னேற்றத்தில் உள்ளது என்பதையும் தெளிவாக கூறினர்.இளந்தமிழன், கடலுார்.

குழப்பத்திற்கு தெளிவு

தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் குழப்பத்துடன் வந்தேன். இங்கு வந்த பிறகு என்ன பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம் என தெளிவாக கூறினர். இதனால், குழப்பத்திற்கு தெளிவு கிடைத்தது. என்ன படித்தால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பது குறித்து மிகவும் அருமையாக கல்வியாளர்கள் விளக்கினர்.ரித்திக், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை